யாரு சாமி அவன்.. ரூ.15,000 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. 8GB ரேம்.. 50MP கேமரா.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் எப்போது வெளியாகும் என்று காத்திருக்க வைக்கும்படியான பட்ஜெட்டில் 5500mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 14 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஏஐ போட்டோ என்ஹான்ஸ், ஏஐ எரைசர் போன்ற பிரீமியம் போன்களுக்கு நிகரான கேமரா பீச்சர்களையும் கொடுக்கும்படி விவோ ஒய்29எஸ் 5ஜி (Vivo Y29s 5G) வெளியாகி இருக்கிறது. இந்த விவோ ஒய்29எஸ் 5ஜி போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ ஒய்29எஸ் 5ஜி அம்சங்கள் (Vivo Y29s 5G Specifications): இந்த விவோ போனில் 570 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.74 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் வாட்டர்-டிராப் நாட்ச் (Water Drop Notch) டிசைன் வருகிறது.

மேலும், வெட்-ஹேண்ட் டச் (Wet-Hand Touch) சப்போர்ட் கிடைக்கிறது. இதற்காக IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கிறது. மிலிட்டரி-கிரேடு டியூரபிலிட்டி (Military-Grade Durability) கொடுக்கிறது. இதன் மூலம் டிராப் ரெசிஸ்டன்ட் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, குவாலிட்டி பக்காவாக இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. இந்த விவோ ஒய்29எஸ் போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது.
ஆகவே, பேக்கப் பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்கலாம். ஓவர் சார்ஜிங், நைட் சார்ஜிங் கன்ட்ரோல்களுக்கு செக்யூரிட்டி புரொடெக்சன் கிடைக்கிறது. இந்த விவோ ஒய்29எஸ் 5ஜி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது.
இதுபோக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வெர்ஷன் கிடைக்கிறது. இன்ஸ்டன்ட் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனிங் (Instant Side-Mounted Fingerprint Scanning) கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களுடன் 50 எம்பி மெயின் கேமரா + 0.8 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.
5 எம்பி பேர்ட்ராய்டு செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance) பீச்சர்கள் மட்டுமல்லாமல், நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), லைவ் போட்டோ (Live Photo) போன்ற ஷூட்டிங் மோட்களும் வருகின்றன. ஏஐ டாக்குமென்ட்ஸ் (AI Documents) உள்ளது.
இந்த விவோ ஒய்29எஸ் 5ஜி போனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி ஜேட் கிரீன் (Jade Green) மற்றும் டைட்டானியம் கோல்டு (Titanium Gold) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இப்போது, குபோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. விலை விவரங்களை விவோ நிறுவனம் உறுதி செய்யவில்லை. இருப்பினும், மார்கெட்டில் கசிந்துவிட்டன.
ரூ.15,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரலாம் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், விவோ ஒய்29 5ஜி ஏற்கனவே இங்கு விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் பட்ஜெட் ரூ.17,000 ஆக இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் வெளியாவது உறுதியாகும்.


Click it and Unblock the Notifications








