Home
Mobile

4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ்.. எல்லாமே பட்ஜெட் விலை.. ஆரம்பமே ரூ.1000 ஆபர்.. Vivo-வின் புதிய 5G போன்!

விவோ நிறுவனம் கூடிய விரைவில் ஒரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அது விவோ ஒய்29 5ஜி (Vivo Y29 5G) மாடல் ஆகும். விவோ ஒய்28 5ஜி (Vivo Y28 5G) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை,விற்பனை சலுகைகள், டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் (அறிமுகத்திற்கு முன்பாகவே) ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

இந்தியாவில் விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை, விற்பனை சலுகைகள்: மை ஸ்மார்ட் ப்ரைஸ் (MySmartPrice) வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 4 ரேம் + இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும்.

4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ்.. Vivo-வின் புதிய 5G போன்!

பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 6ஜிபி ரேம் + 128ஜிபி, 8ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.15,499, ரூ.16,999, மற்றும் ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை (விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனின் ஒரு மார்க்கெட்டிங் புகைப்படத்தின்படி) 4ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் ஆப்ஷன்களில் ரூ.1000 கேஷ்பேக் கிடைக்கும். இதோடு இஎம்ஐ விருப்பத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் ஃபுல் ஸ்வைப் பரிவர்த்தனைகளை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.750 வரையிலான கேஷ்பேக் கிடைக்கும் .

விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களை பெறலாம். கேஷ்பேக் சலுகைகள் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் ஆனது ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க், டிபிஎஸ் பேங்க், பெடரல் பேங்க், இன்டஸ்லேண்ட் பேங்க், ஏயு பேங்க், எஸ்பிஐ, யெஸ் பேங்க், ஜே&கே பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கி பயனர்களுக்கு கிடைக்கும்.

விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6.68 இன்ச் டிஸ்பிளேவை பேக் செய்யலாம்.

கேமராக்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சார் மற்றும் 0.08 மெகாபிக்சல் QVGA இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்றும், முன்பக்கத்தில் (செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக) 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரியை பொறுத்தவரை விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனில் 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரி இடம்பெறலாம். விவோ ஒய்29 5ஜி ஆனது டூயல் 5ஜி (எஸ்ஏ மற்றும் என்எஸ்ஏ) இணைப்பை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங், SGS சான்றிதழ்கள் மற்றும் இராணுவ தர அதிர்ச்சி எதிர்ப்பை வழங்கும் கட்டமைப்பையும் பெறலாம்.

வடிவமைப்பை பொறுத்தவரை விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8.1 மிமீ ஸ்லிம் டிசனையும், எடையில் 198 கிராமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டயமண்ட் பிளாக், க்லேசியர் ப்ளூ மற்றும் டைட்டானியம் கோல்ட் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சரியான விலை, அம்சங்கள் குறித்த விவரங்களை விவோ ஒய்29 5ஜி அறிமுகமானதும் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y29 5G Storage Options Price Details Sale Offer Discounts leaked Ahead India Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X