அடுத்த பட்ஜெட் Vivo 5ஜி போன் ரெடி.. 50எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் அடுத்து விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனின் நிறங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கிளாசியர் ப்ளூ (Glacier Blue), டைட்டானியம் கோல்டு (Titanium Gold), டைமண்ட் பிளாக் (Diamond Black) நிறங்களில் வெளிவரும். குறிப்பாக இந்த போன் டூயல் ரியர் கேமரா மற்றும் ரிங் எல்இடி பிளாஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.

விவோ ஒய்29 5ஜி அம்சங்கள் (Vivo Y29 5G specifications): 6.68-இன்ச் ஃபுல் எச்டி பிளாஸ் டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும் மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் விவோ ஒய்29 5ஜி அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்29 5ஜி போன் அறிமுகமாகும் என்று
கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் விவோ ஒய்29 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 0.8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5500எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ ஒய்29 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த விவோ போன்.
டூயல் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் விவோ ஒய்29 5ஜி போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit: 91mobiles


Click it and Unblock the Notifications








