Home
Mobile

ஆர்டர் பொளக்கும்.. ரூ.16,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

விவோ பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக மிகவும் கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம், 1 டிபிக்கான மெமரி சப்போர்ட், 50 எம்பி டூயல் ரியர் கேமரா சிஸ்டம், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட விவோ ஒய்28எஸ் 5ஜி (Vivo Y28s 5G) போன் களமிறங்கி இருக்கிறது. இப்போது, ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விவோ ஒய்28எஸ் 5ஜி போன் குறித்த முழு விவரம் இதோ.

விவோ ஒய்28எஸ் அம்சங்கள் (Vivo Y28s Specifications): இந்த விவோவில் 6.56 இன்ச் (1612 × 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 840 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

ஆர்டர் பொளக்கும்.. ரூ.16,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 16GB ரேம் மாடல்!

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ மோட் (Pro Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது.

ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வருகிறது. டைனாமிக் ரேம் சப்போர்ட் உள்ளது. 6 ஜிபி ரேம் மாடலில் 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது.

இதுபோக விவோ ஒய்28எஸ் போனில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்டிருக்கிறது. மீடியம் அவுட்புட் கொண்ட மாலி ஜி57 (Mali G57) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆர்டர் பொளக்கும்.. ரூ.16,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 16GB ரேம் மாடல்!

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. இதுவொரு பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் 5ஜி வெர்ஷனாகும். இந்த விவோ ஒய்28எஸ் போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.

15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. பட்ஜெட் மாடல் என்பதால், 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டிருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட், எஸ்டி கார்டு சிலாட் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டிருக்கிறது.

5ஜி, டூயல் 4ஜி, வை-பை 802, ப்ளூடூத் 5.3 மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. இந்த போனில் ட்வின்கிள் பர்பிள் (Twinkling Purple) மற்றும் வின்டேஜ் ரெட் (Vintage Red) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.13,999ஆக இருக்கிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட், விவோ ஸ்டோர் ஆகிய தளங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. விவோ பிரியர்களுக்கு பட்ஜெட்டில் பக்கா 5ஜி மாடலாக இந்த போன் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y28s With 50MP Camera, 5000mAh Battery Launched Sale From Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X