Home
Mobile

வேட்டை பட்ஜெட்.. வெறும் ரூ.15,499 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய பட்ஜெட் பிரியர்களை மிரளவிடும்படி வெறும் ரூ.15,499 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, டைமன்சிட்டி 6300 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் விவோ ஒய்28எஸ் 5ஜி (Vivo Y28s 5G) போன் வெளியாக இருக்கிறது. இந்த விவோ மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஒய்28எஸ் மாடலானது, மலேசிய மார்கெட்டில் வெளியாகிவிட்டது. இந்திய மார்கெட்டில் விரைவில் வெளியாக இருக்கிறது. ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் விலை மற்றும் ரேம் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. முதலில் பீச்சர்களை பார்த்துவிட்டு விலைக்கு செல்வோம்.

வேட்டை பட்ஜெட்.. வெறும் ரூ.15,499 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி போன்!

விவோ ஒய்28எஸ் அம்சங்கள் (Vivo Y28s Specifications): இந்த விவோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது. மோச்சா பிரவுன் (Mocha Brown) மற்றும் ட்வின்கிள் பர்பிள் (Twinkling Purple) கலர்களில் வெளியாகி இருக்கிறது. டைமன்சிடி 6300 6என்எம் (Dimensity 6300 6nm சிப்செட் வருகிறது.

6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது.

இந்த விவோ போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 185 கிராம் எடை மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.56 இன்ச் (1612 × 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.

வேட்டை பட்ஜெட்.. வெறும் ரூ.15,499 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி போன்!

இந்த டிஸ்பிளேவில் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 840 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த விவோ ஒய்28எஸ் போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. பிளாக் & கோல்டு, சைபர் பன்க், கிரீன் ஆரஞ்ச் மற்றும் ப்ளூ ஐஸ் போன்ற நைட்போட்டோகிராபி பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல நைட் மற்றும் போர்ட்ராய்டு பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இதே பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இப்போது, இந்த விவோ ஒய்28எஸ் போனின் இந்திய ரேம், மெமரி மற்றும் விலை விவரங்கள் கசிந்திருக்கின்றன. இந்த விலை பட்ஜெட் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது.

விவோ ஒய்28எஸ் விலை (Vivo Y28s Price): இந்த விவோ போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும் நிர்ணயம் செய்யப்படும் என்று இந்திய மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த போனின் மலேசியா மார்கெட் விலையை பார்க்கையில், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,128ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,665ஆகவும் இருக்கிறது. ஆகவே, ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் இந்த விவோ ஒய்28எஸ் போன் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. பட்ஜெட் பிரியர்களுக்கான மாடலாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y28s 5G With 50MP Camera, Dimensity 6300 Launch Soon India Check Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X