Home
Mobile

யாருமே எதிர்பார்க்கல.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்28எஸ் 5ஜி (Vivo Y28s 5G) ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்28எஸ் 5ஜி அம்சங்கள் (Vivo Y28s 5G specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 840 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

யாருமே எதிர்பார்க்கல.. அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் இந்த விவோ ஒய்28எஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவுடன் இந்த புதிய விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை நம்பி வாங்கலாம்.

யாருமே எதிர்பார்க்கல.. அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியா ஜாக், ப்ளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய வெளிவந்துள்ளது. மோச்சா பிரவுன் (Mocha Brown) மற்றும் ட்விங்கிள் பர்பிள் (Twinkle Purple) நிறங்களில் விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

ஆனால் விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது உலக சந்தையில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். விரைவில் இந்த போனின் விலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X