Home
Mobile

சம்பவம் இருக்கு.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. குறைந்த விலையில் புதிய Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் புதிய விவோ ஒய்28எஸ் 5ஜி (Vivo Y28s 5G) ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போனின் டிசைன், விவரக்குறிப்புகள் மற்றும் பல்வேறு முக்கிய விவரங்கள் தற்போது கூகுள் பிளே கன்சோல் தளத்தில் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கூகுள் பிளே கன்சோல் தளத்தில் V2346 என்ற மாடல் நம்பர் உடன் விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. அதன்படி பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். மேலும் இந்த போன் பிங்க் நிறத்தில் கூகுள் பிளே கன்சோல் தளத்தில் காணப்பட்டது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப்ப பார்க்கலாம்.

சம்பவம் இருக்கு.. குறைந்த விலையில் புதிய Vivo 5ஜி போன் ரெடி..

விவோ ஒய்28எஸ் 5ஜி அம்சங்கள் (Vivo Y28s 5G specifications): தரமான மீடியாடெக் எம்டி6835 (MediaTek MT6835) சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த விவோ போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்28எஸ் 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றி கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது.

சம்பவம் இருக்கு.. குறைந்த விலையில் புதிய Vivo 5ஜி போன் ரெடி..

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவுடன் இந்த விவோ ஒய்28எஸ் 5ஜி போன் வெளிவரும். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

குறிப்பாக விவோ ஒய்28எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.12,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போன் குறைந்த விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Source

Best Mobiles in India

English summary
Vivo Y28s 5G design and specifications revealed on Google Play console: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X