கடகடவென சரியும் விவோ 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்தியாவில் சாம்சங், சியோமி, மோட்டோ நிறுவனங்களை விட விவோ நிறுவனத்தின் போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ நிறுவனத்தின் தரமான விவோ ஒய்28 5ஜி (Vivo Y28 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் விவோ ஒய்28 5ஜி போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்ட ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.12,499 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்28 5ஜி அம்சங்கள் (Vivo Y28 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் (MediaTek Dimensity 6020 SoC) உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் ஃபன்டச் ஒஸ் 13 ( FunTouch OS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ( Android 13) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
குறிப்பாக 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் 1612 × 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 83 சதவீதம் என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Color Gamut), வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போ மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU)கிராபிக்ஸ் கார்டு உடன் வெளிவந்தது. எனவே இந்த விவோ ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் விவோ ஒய்28 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

அதேபோல் 5000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த விவோ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) மற்றும் கிளிட்டர் அக்வா (Glitter Aqua) நிறங்களில் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், டூயல் சிம், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது விவோ ஒய்28 5ஜி. குறிப்பாக ஐபி54 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த போன். பின்பு இந்த விவோ போனின் எடை 186 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








