இப்படியொரு விவோ 5G போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்.. ரூ.13,990 போதும்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது கூகுள் பே கன்சோல் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பெரிய டிஸ்பிளே, டைமன்சிட்டி சிப்செட், டூயல் ரியர் கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ ஒய்28 5ஜி அம்சங்கள் (Vivo Y28 5G specifications): 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 1,080 x 2,388 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக அருக்கும்.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் . எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஃபன்டச் ஒஸ் 13 (FuntouchOS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13)இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என்கிற மூன்று வேரியண்ட்களில் விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக கிரிஸ்டல் பர்பிள் மற்றும் கிளிட்டர் அக்வா நிறங்களில் இந்த விவோ போன் விற்பனைக்கு வரும்.
5ஜி, 4ஜி எல்டிஇ, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்28 5ஜி. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது விவோ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








