Home
Mobile

தட்டித் தூக்கும் விவோ.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ ஒய்28 5ஜி அம்சங்கள் (Vivo Y28 5G specifications): 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 1,080 x 2,388பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக அருக்கும்.

தட்டித் தூக்கும் விவோ.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா..  எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஃபன்டச் ஒஸ் 13 ( FuntouchOS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த விவோ போன் வெளிவரும்.

தட்டித் தூக்கும் விவோ.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா..  எந்த மாடல்?

5ஜி, 4ஜி எல்டிஇ, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) மற்றும் கிளிட்டர் அக்வா (Glitter Aqua) நிறங்களில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்28 5ஜி போன் ரூ.13,999 விலையில் விற்பனைக்கு வரும். பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.15,499 விலையிலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.16,999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y28 5G phone colors, Design and price revealed: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X