Home
Mobile

சத்தமின்றி 5ஜி போனை அறிமுகம் செய்த விவோ.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் சத்தமின்றி விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி கேமரா, ஐபி54 ரேட்டிங், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் விவோ ஒய்28 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ ஒய்28 5ஜி அம்சங்கள் (Vivo Y28 5G specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1612 × 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 83 சதவீதம் என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Color Gamut),வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக அருக்கும்.

சத்தமின்றி 5ஜி போனை அறிமுகம் செய்த விவோ.. 50MP கேமரா.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் (MediaTek Dimensity 6020 SoC)வசதியுடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஃபன்டச் ஒஸ் 13 (FunTouch OS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ( Android 13)இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என்கிற மூன்று வேரியண்ட்களில் விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) மற்றும் கிளிட்டர் அக்வா (Glitter Aqua) நிறங்களில் நிறங்களில் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.

சத்தமின்றி 5ஜி போனை அறிமுகம் செய்த விவோ.. 50MP கேமரா.. எந்த மாடல்?

டூயல் சிம், 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்28 5ஜி. மேலும் ஐபி54 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த போன். பின்பு இந்த விவோ போனின் எடை 186 கிராம் ஆகும்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்28 5ஜி போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.15,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.16,999 விலையிலும் வாங்க முடியும். குறிப்பாக அமேசான், ஜியோமார்ட், க்ரோமா, போன்ற தளங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y28 5G has been launched in India at a price of Rs 13999: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X