Home
Mobile

ஆர்டர் அதிரும்.. 44W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. சத்தமின்றி அறிமுகமானது Vivo போன்.. எந்த மாடல்..

விவோ நிறுவனம் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் விவோ போன்களில் இருப்பதால் உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது விவோ நிறுவனம் இந்தோனேசியாவில் விவோ ஒய்27எஸ் (Vivo Y27s) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த விவோ ஒய்27எஸ் போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சத்தமின்றி அறிமுகமானது Vivo போன்.. எந்த மாடல்..

6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி (full-HD+ LCD)டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 2,388 x 1,080 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த ஆக்டோ-கோர்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (octa-core Qualcomm Snapdragon 680)சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்கு இந்த போன் அருமையாகப் பயன்படும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் ஃபன்டச் ஒஎஸ் 13 (FuntouchOS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்27எஸ் ஸமார்ட்போன் அறிமும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

சத்தமின்றி அறிமுகமானது Vivo போன்.. எந்த மாடல்..

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ ஒய்27எஸ் போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ( 44W wired fast charging), கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இதுதவிர 4ஜி நானோ சிம்கள், வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 192 கிராம் ஆகும். அதேபோல் பிளாக் மற்றும் கார்டன் கிரீன் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவோ ஒய்27எஸ் போனின் விலை IDR 2,399,000 (இந்திய மதிப்பில் ரூ.12,800) ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y27s With Snapdragon 680 SoC Launched:check price, specifications, availability: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X