அப்படி போடு..கம்மி ரேட்ல Vivo 5ஜி ஸ்மார்ட்போன் வரப்போகுது! என்ன மாடல்? என்னென்ன அம்சங்கள்?
விவோ நிறுவனம் தனது புதிய Vivo Y27 5G ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சி டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு 2388 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

விரைவில் அறிமுகமாகும் விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

அதேபோல் 5ஜி, 4ஜி, வைஃபை 802.11, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ Y27 5ஜி. மேலும் மிஸ்டிக் பிளாக் மற்றும் சாடின் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் இந்த விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








