50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் விரைவில் வெளியாகும் தரமான Vivo போன்.!
விவோ நிறுவனம் இந்த மாதம் இறுதியில் தரமான விவோ Y22s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விவோ Y22s ஸ்மார்ட்போன்
அதேபோல் இந்த விவோ Y22s ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில கசிந்த விவோ Y22s ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அருமையான டிஸ்பிளே
விவோ Y22s ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
புதிய விவோ Y22s ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். மேலும் இதன் சிப்செட் வசதியை விடகேமரா வசதி இன்னும் சிறப்பாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அட்டகாசமான கேமரா
அதாவது விவோ Y22s ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த விவோ Y22s ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது விவோ Y22s ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
கொடுக்கப்படும்.

சூப்பரான பேட்டரி
விவோ Y22s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட்சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

பட்ஜெட் விலை
4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2. ஏ-ஜிபிஎஸ், என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y22s போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications