ஆடி போவீங்க, அசந்து போவீங்க: பட்ஜெட் விலையில் ப்ரீமியம் தரத்துடன் Vivo Y22 அறிமுகம்!

|

Vivo Y22 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி85 SoC, 50 எம்பி கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்

பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் Vivo Y சீரிஸ் இன் கீழ் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அது Vivo Y22 ஆகும்.

வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே ஆதரவோடு மீடியாடெக் ஹீலியோ ஜி85 கேமிங் SoC சிப்செட் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

50 எம்பி பிரதான கேமரா, 5,000mAh பேட்டரி

50 எம்பி பிரதான கேமரா, 5,000mAh பேட்டரி

2ஜிபி வரையிலான ரேம் நீட்டிப்பு ஆதரவு 50 எம்பி பிரதான கேமரா, 5,000mAh பேட்டரி என பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம்

4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம்

Vivo Y22 ஸ்மார்ட்போனானது தற்போது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி வரலாம். முதலில் இந்த ஸ்மார்ட்போனின் விலை பார்த்துவிடலாம். இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.

Vivo Y22 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo Y22 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை IDR 2,399,000 (தோராயமாக ரூ.12,900) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தோனேஷியாவில் உள்ள இ-காமர்ஸ் தளங்களில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Metaverse Green, Starlit Blue மற்றும் Summer Cyan ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

Vivo Y22 இன் உலகளாவிய கிடைக்கும் தன்மை மற்றும் விலை பற்றிய விவரங்களை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

Vivo Y22 சிறப்பம்சங்கள்

Vivo Y22 சிறப்பம்சங்கள்

Vivo Y22 ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ) ஆதரவோடு ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12 மூலம் இயங்குகிறது.

(720 x 1,612) பிக்சல் தீர்மானத்தோடு கூடிய 6.55 இன்ச் முழு எச்டி எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 530 நிட்ஸ் உச்ச பிரகாசம் இதில் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேயில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Helio G85 கேமிங் SoC சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

50 எம்பி பிரதான கேமரா ஆதரவு

50 எம்பி பிரதான கேமரா ஆதரவு

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், Vivo Y22 இல் அபெர்ச்சர் லென்ஸ் உடன் கூடிய 50 எம்பி பிரதான கேமரா என்ற டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இரண்டாம் நிலை கேமராவாக 2 எம்பி பொக்கே சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 எம்பி செல்பி சென்சார் இடம்பெற்றுள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

Vivo Y22 ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் v5, GPS, Glonass, NFC, OTG, FM ரேடியோ மற்றும் USB டைப்-சி போர்ட் என்ற இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது.

ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது.

5,000mAh பேட்டரி உடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

5,000mAh பேட்டரி உடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

Vivo Y22 ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவோடு கூடிய 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கு என IP54 மதிப்பீட்டை இந்த ஸ்மார்ட்போன் பெற்றிருக்கிறது.

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அனைத்தும் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது என்பது வரவேற்கத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே இன்னும் சிறிது நாட்கள் மட்டும் காத்திருந்தால், சிறந்க பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பது உறுதி.

Best Mobiles in India

English summary
Vivo Y22 Budget Price Smartphone Launched With 50Mp Camera, 5,000mAh Battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X