வெயிட் பண்ணி வாங்கலாமே: ஜனவரி 3 உறுதி- 50 எம்பி கேமரா, 4ஜிபி ரேம் உடன் விவோ ஒய்21டி: மீண்டும் பட்ஜெட் விலை!
விவோ ஒய்21டி இந்திய வெளியீட்டு தேதி ஜனவரி 3 ஆக இருக்கும் எனவும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 4ஜி எஸ்ஓசி வசதி உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. விவோ ஒய்21டி ஸ்மார்ட்போனானது மாடல் எண் வி2131 உடன் சான்றிதள் தளத்தில் தோன்றி இருக்கிறது.

விவோ ஒய்21டி சாதனம்
விவோ ஒய்21டி சாதனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக சீன ஸ்மார்ட்போன் பிராண்டால் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் புதிய கசிவுப்படி விவோ ஒய் சீரிஸ் போன் ஜனவரி முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. கசிவுத் தகவலின்படி விவோ ஒய்21டி ஸ்மார்ட்போன் ஆனது முக்கிய விவரங்களை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இது 4 ஜிபி ரேம் வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த விவோ ஒய்21டி ஸ்மார்ட்போனானது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. விவோ ஒய்21டி சாதனம் தேசிய ஒலிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு கவுன்சில் கமிட்டி (என்பிடிசி) சான்றிதழ் தளத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது.

இந்திய வெளயீட்டு தேதி மற்றும் விவரக்குறிப்புகள்
மைஸ்மார்ட் பிரைஸ் உடன் இணைந்து அறியப்பட்ட தகவலை டிப்ஸ்டர் இஷான் அகர்வால் விவோ ஒய்21டி ஸ்மார்ட்போனின் இந்திய வெளயீட்டு தேதி மற்றும் விவரக்குறிப்புகளை கசிந்திருக்கிறார். வெளியான அறிக்கையின்படி விவோ ஒய்21டி ஸ்மார்ட்போனை விவோ ஜனவரி 3 2022-ல் வெளியிடும் என கூறப்படுகிறது. விவோ ஒய்21டி இந்திய வெளியீட்டு தேதி ஜனவரி 3 ஆக இருக்கும் எனவும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 4ஜி எஸ்ஓசி வசதி உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. விவோ ஒய்21டி ஸ்மார்ட்போனானது மாடல் எண் வி2131 உடன் சான்றிதள் தளத்தில் தோன்றி இருக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு
விவோ ஒய் சீரிஸ் சாதனமானது இடைப்பட்ட வரம்பில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 680 4ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சிப்செட் அக்டோபரில் குவால்காம் வெளியிட்டது இது 6 என்எம் செயல்முறை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. விவோ ஒய்21டி ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மெமரி விரவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கும் என கூறப்படுகிறது.

50 மெகாபிக்சல் பிரதான கேமரா
விவோ ஒய்21டி ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்களுக்கு என 50 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு பின்புற கேமராக்கள் மற்றும் போனின் செல்ஃபி கேமரா குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. வெளியான தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருததப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. விவோ ஒய்21டி சாதனத்தில் யூஎஸ்பி டைப் சி போர் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்
ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்பட்ட விவோ வி23 5ஜி உடன் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு கவுன்சில் (என்பிடிசி) சான்றளிப்ப தளத்தில் கூறப்படுகிறது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் விவோ ஒய்21டி ஸ்மார்ட்போனை இந்த தளத்தில் கண்டுபிடித்ததாக குறிப்பிட்டார். இந்த ஸ்மார்ட்போன் என்பிடிசி தரவுத்தளத்தில் மாதிரி எண் வி2131 உடனும் விவோ வி23 5ஜி மாடல் எண் வி2130 உடனும் சான்றிதழ் தளத்தில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications