50எம்பி ரியர் கேமராவுடன் விவோ Y21s ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
விவோ நிறுவனம் இந்தோனேசிய சந்தையில் விவோ Y21s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 50எம்பி ரியர் கேமரா, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ Y21s ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.14,400-ஆக உள்ளது. குறிப்பாக Midnight Blue மற்றும் Pearl White நிறங்களில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y21s ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால்பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த விவோ Y21s ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி உள்ளது. மேலும் இந்த சாதனம் FunTouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே விவோ Y21s ஸ்மார்ட்போனை இயக்குவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y21s ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

விவோ Y21s ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

விவோ Y21s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஆனால் இது 5ஜி ஸ்மார்ட்போன் கிடையாது, 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யூஎஸ்பி டைப்-சி போர்ட், ப்ளூடூத் வி 5, டூயல் சிம் ஸ்லாட்டுகள், 4 ஜி, ஜிபிஎஸ், ஓடிஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோY21s ஸ்மார்ட்போன். விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தனித்துவமான வசதிகளுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications