Home
Mobile

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ Y21e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y21e ஸ்மார்ட்போன் மாடலை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது விவோY21e ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோY21e

விவோY21e ஸ்மார்ட்போன் ஆனது டயமண்ட் க்ளோ மற்றும் மிட்நைட் ப்ளூ நிறங்களில் கிடைக்கும். அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும்
64ஜிபி மெமரி கொண்ட விவோ Y21e ஸ்மார்ட்போன் மாடலை ரூ.12,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்தை
விவோ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில ஆஃப்லைன் தளங்களில் வாங்க முடியும்.

விவோ Y21e ஸ்மார்ட்போன்

விவோ Y21e ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி Halo Full View டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த விவோ Y21e

இந்த விவோ Y21e ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y21e ஸ்மார்ட்போன் ஆ

விவோ Y21e ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எல்இடி பிளாஷ், போர்ட்ரெய்ட் மோட்,

இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல். அதேபோல் எல்இடி பிளாஷ், போர்ட்ரெய்ட் மோட், சூப்பர் HDR மற்றும் ஃபேஸ் பியூட்டி மோட் போன்ற பல கேமரா அம்சங்களைவழங்குகிறது இந்த சாதனம்.

விவோ Y21e ஸ்மார்ட்போனில் 5000

விவோ Y21e ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ Y21e ஸ்மார்ட்போனில் 4ஜி

இந்த புதிய விவோ Y21e ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y21e With 5,000mAh Battery Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X