ரூ. 11,490 விலையில் Vivo Y20A ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக இந்த தளத்தில் மட்டும் விற்பனை..
விவோ நிறுவனம் Vivo Y20A என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இப்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் Vivo Y20 ஸ்மார்ட்போனின் வாரிசு வேரியண்டாக இந்த வார தொடக்கத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளேவுடன் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது.

Vivo Y20A ஸ்மார்ட்போன்
Vivo Y20A சமீபத்திய மென்பொருள் அனுபவத்துடன் 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற சிறப்பான அம்சத்துடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக விற்பனைக்கு தற்பொழுது களமிறங்கியுள்ளது. இந்த புதிய Vivo Y20A ஸ்மார்ட்போன் 64 ஜிபி உள் சேமிப்புடன் இரண்டு தனித்துவமான வண்ண விருப்பங்களிலும் வருகிறது. முக்கியமாக நீங்கள் கவனிக்கவேண்டிய அம்சமாக இதில் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vivo Y20A விலை மற்றும் விற்பனை விவரம்
Vivo Y20A ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய விலை வெறும் ரூ. 11,490 மட்டுமே. இந்த புதிய Vivo Y20A ஸ்மார்ட் போன் டான் ஒயிட் மற்றும் நெபுலா ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இது முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறைக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Vivo Y20A சிறப்பம்சங்கள்
- 6.51' இன்ச் 720x1,600 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட்
- 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு
- ஃபன்டச் ஓஎஸ் 11 உடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார்
- 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
- மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ்
- 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் நானோ சிம்
- 4 ஜி எல்டிஇ
- வைஃபை
- புளூடூத் 4.2
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- எஃப்எம் ரேடியோ
- மைக்ரோ-யூ.எஸ்.பி
- 3.5 ஆடியோ ஜாக்
- 10W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5000 எம்ஏஎச் பேட்டரி

கேமரா அமைப்பு



Click it and Unblock the Notifications