விவோ ஒய்20 ஏ இந்தியாவில் அறிமுகம்: பட்ஜெட் விலையில் அதிரடி அம்சங்கள்!

|

விவோ நிறுவனம் புதுமாடலான விவோ ஒய்20 ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் டிரிபிள் கேமரா, ஆண்ட்ராய்டு 11 உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளோடு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ ஒய் 20 மாடலின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். விவோ ஒய்20 ஏ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.

விவோ ஒய் 20 ஏ ஸ்மார்ட்போன்

விவோ ஒய் 20 ஏ ஸ்மார்ட்போன்

விவோ ஒய் 20 ஏ ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அது டான் ஒயிட் மற்றும் நெபுலா ப்ளூ என்ற இரண்டு நிறங்களாகும். விவோ நிறுவன மெயின்லைன் சில்லறை விற்பனை கடைகள், விவோ இந்தியா இஸ்டோர் மற்றும் பிற இகாமர்ஸ் வலைதளங்களில் ஜனவரி 2 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.51 இன்ச் டிஸ்ப்ளே

6.51 இன்ச் டிஸ்ப்ளே

விவோ ஒய் 20 ஏ ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் டிஸ்ப்ளே முழு எச்டி ப்ளஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் உடனஅ இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 439 செயலி பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பிற்கு கைரேகை சென்சார்

பாதுகாப்பிற்கு கைரேகை சென்சார்

விவோ ஒய் 20 ஏ ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 64 ஜிபி உள்சேமிப்பு இருக்கிறது. அதேபோல் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய எஸ்டி கார்ட் ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது.

13 மெகாபிக்சல் கேமரா

13 மெகாபிக்சல் கேமரா

விவோ ஒய் 20 ஏ ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. இதில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா இருக்கிறது. அதேபோல் இதில் இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

விவோ ஒய் 20 ஏ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதில் ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி போர்ட் உள்ளிட்டை இருக்கிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Y 20A Launched in India with Triple camera, Android 11 and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X