Home
Mobile

பொசுக்குனு பட்ஜெட்.. ரூ.14,076 போதும்.. 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய பட்ஜெட் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களுடன் விவோ ஒய்200டி (Vivo Y200t) போன் வெளியாகி இருக்கிறது. இதன் விலை, அம்சங்கள் இதோ.

விவோ ஒய்200டி அம்சங்கள் (Vivo Y200t Specifications): இந்த விவோவில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 4 (Origin OS 4) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.

பொசுக்குனு பட்ஜெட்.. ரூ.14,076 போதும்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

6.72 (2408×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்டிசி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த விவோ ஒய்200டி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்களும் கிடைக்கின்றன. இந்த விவோவில் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) வருகிறது.

ஆகவே, ஆட்டோபோகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. இந்த மெயின் கேமராவில் சிஎம்ஓஎஸ் (CMOS) சென்சார் வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் மற்றும் நைட் சீன் (Night Scene), போர்ட்ராய்டு (Portrait), மைக்ரோ மூவி (Micro Movie), ஹை-பிக்சல் (High Pixel) பீச்சர்கள் வருகின்றன.

பொசுக்குனு பட்ஜெட்.. ரூ.14,076 போதும்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த விவோ ஒய்200டி போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இதுவொரு பட்ஜெட் மாடல் என்பதால், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது.

இந்த விவோவில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியோடு 7.99 மிமீ தடிமன், 199 கிராம் எடை வருகிறது. இந்த விவோ ஒய்200டி போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டுயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6) கனெக்டிவிட்டி வருகிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,076ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,960ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் ரூ.17,595ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,565ஆகவும் இருக்கிறது.

க்ங்ஷான் (Qingshan), அரோரா (Aurora) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இப்போது, சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு விற்பனைக்கும் வந்துள்ளது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வெளியாகிறது. பட்ஜெட்டில் பக்கா பீச்சர்களை கொண்டிருப்பதால், இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y200t With 8GB RAM, 50MP Camera, 6000mAh Battery Launched in China Here Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X