Home
Mobile

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. இந்தியாவில் விவோ 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ ஒய்200இ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ட்ரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் சிப்செட், அமோலெட் டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்200இ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ ஒய்200இ அம்சங்கள் (vivo Y200 specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இ4 அமோலெட் (E4 AMOLED) பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்200இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 90% என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Colour Gamut) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்..  இந்தியாவில் விவோ 5ஜி போன் அறிமுகம்..

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் வசதியுடன் விவோ ஒய்200இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதனுடன் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 613 ஜிபுயு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி + 128ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்200இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீஙகள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி பொக்கெ சென்சார் + ப்ளிக்கர் சென்சார் (Flicker sensor) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்200இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் ஹை-ரெஸ் ஆடியோவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு கொண்டுள்ளது இந்த விவோ போன். சாஃப்ரன் டிலைட் (Saffron Delight), பிளாக் டைமண்ட் (Black Diamond) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh battery) மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியுடன் விவோ ஒய்200இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்..  இந்தியாவில் விவோ 5ஜி போன் அறிமுகம்..

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது விவோ ஒய்200இ ஸ்மார்ட்போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ். யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் இந்த போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்200இ போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.20,999 ஆக உள்ளது. பிளிப்கார்ட் மற்றும் விவோ.காம் இணையதளத்தில் வரும் பிப்ரவரி 29-ம் தேதி வரை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு 1000 தள்ளுபடி கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
vivo Y200e launched in India at price of Rs 19,999: check specifications, sale date : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X