அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. 44W சார்ஜிங்.. 64MP கேமரா.. பிப்.22-ல் வரும் விவோ 5G போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போனை வரும் பிப்ரவரி 22-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் ப்ளூ மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ ஒய்200இ 5ஜி அம்சங்கள் (Vivo Y200e 5G specifications): ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் (IP54 Rating) பெற்றுள்ளது விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன்.
விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் அமோலெட் (FHD+ Samsung AMOLED) பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாகும். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா வசதி இதில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்தியாவில் விவோ ஒய்200இ 5ஜி போன் ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications