Home
Mobile

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 44W சார்ஜிங்.. 64MP கேமரா.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ ஒய்200இ 5ஜி எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போனை இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யபட திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம்.

குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமராக்கள், அமோலெட் டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்தியாவில் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Vivo 5ஜி போன்..

விவோ ஒய்200இ 5ஜி அம்சங்கள் (Vivo Y200e 5G specifications): ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (FHD+ AMOLED) பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்புடன் தான் வெளிவந்தது. ஆனால் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். குறிப்பாக 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்200இ 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் ஆப் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் (IP54 Rating) பெற்றுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன்.

விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Vivo 5ஜி போன்..

5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்200இ 5ஜி மாடல். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

photo courtesy: 91mobiles, Play Console listing, gizmochina

Best Mobiles in India

English summary
Vivo Y200e 5G will be launched in India by the end of February: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X