Home
Mobile

மார்க்கெட்டே திணறப்போகுது.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 64MP கேமரா.. 12GB ரேம்.. 44W சார்ஜிங்.. எந்த போன்?

விவோ நிறுவனம் தொடர்ந்து ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்த ஒய் சீரிஸ் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம்.

அதாவது விவோ ஒய்200இ 5ஜி எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம். தற்போது இந்த புதிய விவோ போன் V2336 என்ற மாடல் எண் உடன் கீக்பென்ச் தளத்தில் காணப்பட்டுள்ளன. இதுதவிர விவோ ஒய்200இ 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் கூட அந்த தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்ப்போம்.

மார்க்கெட்டே திணறப்போகுது.. 12GB ரேம்.. 44W சார்ஜிங்.. எந்த போன்?

விவோ ஒய்200இ 5ஜி விவரக்குறிப்புகள் (Vivo Y200e 5G specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 SoC) வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அட்ரினோ 613 ஜிபுயு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மற்றும் அட்ரினோ 613 ஜிபுயு கிராபிக்ஸ் கார்டு வசதியானது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 64எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 32எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

6.6-இன்ச் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக விவோ ஒய்200இ 5ஜி போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

மார்க்கெட்டே திணறப்போகுது.. 12GB ரேம்.. 44W சார்ஜிங்.. எந்த போன்?

4800எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜி வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ ஒய்200இ 5ஜி போனில் உள்ளன. மேலும் விவோ ஒய்200இ 5ஜி போன் ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y200e 5G specifications spotted on Geekbench: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X