Home
Mobile

அதிர போகுது ஆர்டர்.. ரூ.20,000 போதும்.. 44W சார்ஜிங்.. 64MP கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்200இ 5ஜி போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் விவோ ஒய்200இ 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்திய டிப்ஸ்டர் ஒருவர் விவோ ஒய்200இ 5ஜி போனின் விலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே வெளியான இந்த விவோ ஒய்200இ 5ஜி போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதிர போகுது ஆர்டர்.. ரூ.20,000 போதும்.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?

விவோ ஒய்200இ 5ஜி அம்சங்கள் (Vivo Y200e 5G specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் அமோலெட் (FHD+ Samsung AMOLED) பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் (IP54 Rating) பெற்றுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். குறிப்பாக 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்200இ 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர போகுது ஆர்டர்.. ரூ.20,000 போதும்.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். குறிப்பாக இந்த போனக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo courtesy: 91mobiles, Play Console listing, gizmochina

Best Mobiles in India

English summary
Vivo Y200e 5G Price Range Leaked in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X