ஆர்டர் தூள் பறக்க போகுது.. பட்ஜெட் விலை.. 44W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. புதிய விவோ போன் ரெடி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்தியாவில் வரும் பிப்ரவரி 22-ம் தேதி புதிய விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் விவரக்குறிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இதன் விலைப் பற்றிய தகவலும் ஆன்லைனில் கசிந்துள்ளது.
தற்போது வெளியான தகவலின்படி, இந்தியாவில் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,999-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ ஒய்200இ 5ஜி அம்சங்கள்: 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் அமோலெட் (FHD+ Samsung AMOLED) பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் (IP54 Rating) பெற்றுள்ளது விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன்.
விவோ ஒய்200இ 5ஜி போனில் 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா வசதி இதில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000எம்ஏஎச் பேட்டரி ( 5000mAh battery) மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scanner) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன்.
விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








