Home
Mobile

மார்கெட் காலி.. ரூ.18410 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சாருடன் மெயின் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களுடன் பட்ஜெட்டில் விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) போன் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

விவோ ஒய்200 அம்சங்கள் (Vivo Y200 Specifications): இந்த விவோவில் 6.78 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

மார்கெட் காலி.. ரூ.18410 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே மாடல்!

ஐக்யூ 12 சீரிஸ் போன்களில் வரும் ரியர் கேமரா டிசைனை போலவே இந்த கேமராவிலும் வருகிறது. சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் (Sony LYT 600 Sensor) 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

இந்த கேமராவில் ஏஎப் போகஸ் (AF Focus), 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (10x Digital Zoom) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. அதேபோல 2எக்ஸ் டிஜிட்டல் ஜூம் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, கேமராவில் இந்த போன் பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த விவோ ஒய்200 போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஓர்ஜின் ஓஎஸ் 4 (Origin OS 4) வருகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ப மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) மொபைல் சிப்செட் வருகிறது.

மார்கெட் காலி.. ரூ.18410 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே மாடல்!

அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் வருவதால், இந்த விவோ ஒய்200 மாடலானது, கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படி இருக்கும். இந்த போனில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, நானோ சிம் சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது.

இந்த விவோ ஒய்200 போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் IP64 ரெசிஸ்டன்ட் வருகிறது.

இந்த போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,014 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,489 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,713 ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,410ஆகவும் இருக்கிறது.

மே 24ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. அதன் பிறகு மற்ற நாடுகளில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே, விவோ ஒய்200 மாடல் இருக்கிறது. ஆனால், இந்த டிசைன் மற்றும் அம்சங்களில் இருக்கவில்லை. ஆகவே, மற்றொரு வெர்ஷனாக இந்த போன் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y200 With 50MP Camera, 6000mAh Battery Sale From May 24 in China Here Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X