Home
Mobile

அதிரவிடும் பட்ஜெட்.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 256ஜிபி மெமரி.. வருகிறது தரமான விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ ஒய்200 (Vivo Y200) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் இந்த அக்டோபர் மாதம் இறுதியில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.24,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு அமேசான், விவோ ஸ்டோர் போன்ற தளங்களில் இந்த விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த போனின் டீசர் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிடப்பட்டது.மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன்  சிப்செட்.. 256ஜிபி மெமரி.. வருகிறது தரமான விவோ போன்..

அதாவது விவோ ஒய்200 ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Qualcomm Snapdragon 4 Gen 1) சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

மேலும் விவோ ஒய்200 ஸ்மார்ட்போனில் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. மேலும் FunTouchOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஸ்மார்ட் ஆரா லைட் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்ட 64எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்200 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன்  சிப்செட்.. 256ஜிபி மெமரி.. வருகிறது தரமான விவோ போன்..

44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்200 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் ஆனது 190 கிராம் எடை கொண்டுள்ளது.

5ஜி, ஜிபிஎஸ், என்எப்எசி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த விவோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்தியச் சந்தையில் இந்த விவோ ஒய்200 ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y200 will be launched in India by the end of this October : check price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X