அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. 64MP கேமரா.. இந்தியாவுக்கு வரும் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ ஒய்200 ப்ரோ 5ஜி (Vivo Y200 Pro 5G) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் டீசர் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதுவும் டூயல் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 3டி கர்வ்ட் டிஸ்பிளே உடன் விவோ ஒய்200 ப்ரோ 5ஜி போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த விவோ ஒய்200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ ஒய்200 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo Y200 Pro 5G specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் வசதியுடன் விவோ ஒய்200 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இது வெளிவரும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸகளையும் தடையின்றி பயன்படுத்த முடியும் மேலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும் என்று விவோ நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

6.7-இன்ச் அமோலெட் 3டி கர்வ்ட் டிஸ்பிளே (AMOLED 3D curved display) விவோ ஒய்200 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த சாதனம் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
OIS ஆதரவு கொண்ட 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி பொக்கெ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவு இதில் உள்ளது.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் உள்ளது. மேலும் சில்க் பிளாக் மற்றும் சில்க் கிரீன் நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இது நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging support) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, விவோ ஒய்200 ப்ரோ 5ஜி போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








