அதிரி புதிரி ஆர்டர்.. AMOLED டிஸ்பிளே.. 64MP கேமரா.. இந்தியாவில் புதிய விவோ 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ ஒய்200 ப்ரோ 5ஜி (vivo Y200 Pro 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போனின் அம்சங்கள், விலை, விற்பனை தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் சற்று விரவாகப் பார்க்கலாம்.
விவோ ஒய்200 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo Y200 Pro 5G specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட்அமோலெட் (Full HD+ curved AMOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5G (Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்களுக்கு தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று விவோ நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது.
விவோ ஒய்200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதோடு எல்இடி பிளாஷ் மற்றும் ஆரா லைட் (Aura Light) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் விவோ ஒய்200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 ப்ரோ 5ஜி போன். எனவே நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுள் இதில் உள்ளன. இந்த போனின் எடை 172 கிராம் ஆகும். சில்க் கிரீன் மற்றும் சில்க் பிளாக் நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்200 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. இன்று முதல் பிளிப்கார்ட் (Flipkart), விவோ ஸ்டோர் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த புதிய விவோ போன் வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2500 கேஷ்பேக் சலுகையும் உள்ளது.


Click it and Unblock the Notifications








