மே 21 கன்ஃபார்ம்.. 64MP கேமரா.. 44W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 3டி கர்வ்ட் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்200 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo Y200 Pro 5G specifications): 6.7-இன்ச் அமோலெட் 3டி கர்வ்ட் டிஸ்பிளே (AMOLED 3D curved display) இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

விவோ ஒய்200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் வசதி உள்ளது. அதேபோல்அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று விவோ நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான ஆடியோ அம்சத்துடன் அறிமுகமாகும்.

குறிப்பாக இந்த போன் 8ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. மேலும் இந்த விவோ போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது.
விவோ ஒய்200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் OIS ஆதரவு கொண்ட 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி பொக்கெ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ ஒய்200 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்படும். எனவே இது நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging support) வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

சில்க் பிளாக் மற்றும் சில்க் கிரீன் நிறங்களில் விவோ ஒய்200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஸ், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
எப்போது அறிமுகம்? வரும் மே 21-ம் தேதி விவோ ஒய்200 ப்ரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் ரூ.20,000 விலையில் விற்பனைக்கு வரும் என ஆன்லைனில் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான போன்.


Click it and Unblock the Notifications








