Home
Mobile

மிரண்டு போன மார்க்கெட்.. ரூ.12,865 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. அறிமுகமானது புது Vivo போன்..

விவோ நிறுவனம் புதிய விவோ ஒய்200 பிளஸ் (Vivo Y200 Plus) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது விவோ ஒய்200 பிளஸ் போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்200 பிளஸ் அம்சங்கள் (Vivo Y200 Plus Specifications): 6.68-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்200 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மிரண்டு போன மார்க்கெட்.. அறிமுகமானது புது Vivo போன்..

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் விவோ ஒய்200 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ ஒய்200 பிளஸ் போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்200 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6000mAh பேட்டரி உடன் விவோ ஒய்200 பிளஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனின் பேட்டரி சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரண்டு போன மார்க்கெட்.. அறிமுகமானது புது Vivo போன்..

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant)உடன் விவோ ஒய்200 பிளஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் புளூடூத் 4.2, 3.5 மிமீ ஜாக், டைப்-சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

விவோ ஒய்200 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ.12,865)-ஆக உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விவோ நிறுவனம் அடுத்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y200 Plus launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X