யாரு சாமி அவன்.. ரூ.18,410 பட்ஜெட்ல SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
விவோ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போடும்படியான பட்ஜெட்டில் சோனி சென்சார் கேமரா, 6000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் பிரீமியம் டிசைனில் விவோ ஒய்200 ஜிடி (Vivo Y200 GT) 5ஜி போன் வெளியாகி இருக்கிறது.
விவோ ஒய்200 ஜிடி அம்சங்கள் (Vivo Y200 GT Specifications): இந்த விவோ போனில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision), 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் பிரீமியம் குவாலிடிட்டி அவுட்புட் எதிர்பார்க்கலாம். டிஸ்பிளேவை போலவே கேமரா அம்சங்கள் மிரள விடுகின்றன.
இந்த விவோ ஒய்200 ஜிடி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 சென்சார் (Sony LYT 600 Sensor), ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.
16 எம்பி செல்பீ ஷூட்டரும் சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சாருடன் வருகிறது. ஆகவே, கேமரா பிரியர்களிடையே இந்த விவோ ஒய்200 ஜிடி போனானது, வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 4 (Origin OS 4) வருகிறது.

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மிட்-பிரீமியம் லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த விவோ ஒய்200 போனில் 4 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் வருகின்றன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ வருகிறது.
இந்த விவோ ஒய்200 ஜிடி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.4, வை-பை 6 மற்றும் ஜிபிஎஸ் சப்போர்ட் வருகிறது.
அதேபோல என்எப்சி (NFC) சப்போர்ட் உள்ளது. இந்த விவோவில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,410ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,565ஆகவும் இருக்கிறது.
அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,020ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,475ஆகவும் இருக்கிறது. இப்போது, சீனாவில் வெளியாகி, விற்பனைக்கு வந்துவிட்டது. அடுத்த சில வாரங்களில் இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








