ஆர்டர் அதிரும்.. ரூ.20,000 பட்ஜெட்ல AURO லைட்னிங்.. 2TB மெமரி.. 44W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெறும் ரூ.20,000 பட்ஜெட்டில் அரோ லைட்னிங் பேனல், அமோலெட் டிஸ்பிளே, 64எம்பி கேமரா, 2டிபி மெமரி சப்போர்ட், 44W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களுடன் விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) போன் விற்பனைக்கு வர இருக்கிறது.
விவோ ஒய்200 5ஜி அம்சங்கள் (Vivo Y200 5G Specification): இந்த விவோ போன் 6.67 இன்ச் (1080 x 2400) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டிசிஐ-பி3 (DCI-P3) வைடு கலர் காமட் (Wide Color Gamut) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Octa Core Snapdragon 4 Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) மற்றும் மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹைபிரிட் டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் எஸ்டிகார்டு சிலாட் இடம்பெற்றுள்ளது. இந்த போனில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு மேக்ரோ ஆப்சன் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. அரோ எல்இடி லைட் இடம் பெற்றுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) மாடலாகும். அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த மெயின் கேமராவில் லைவ் போட்டோ (Live Photo), டைம் லேப்ஸ் (Time Lapse), போர்ட்ராய்டு (Portrait), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டூயல் வியூ (Dual View), டபுள் எக்ஸ்போஸர் (Double Exposure) மற்றும் விலாக் மூவி (Vlog Movie) போன்ற பல்வேறு மோட்கள் வருகின்றன.
அதோடு 10x ஜூமிங், ஃபுல்எச்டி ரெக்கார்டிங் உள்ளிட்ட சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (in-screen Fingerprint Scanner) வருகிறது. இந்த பேட்டரியோடு சேர்த்து, 181 கிராம் எடைக் கொண்டுள்ளது.
இந்த விவோ போனில் 5ஜி, 4ஜி எல்டிஇ, 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் வி5.2, வை-பை 802 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. அதோடு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவோ போன் ஜங்கிள் கிரீன் (Jungle Green) மற்றும் டெசர்ட் கோல்டு (Desert Gold) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மைக்ரோசைட் திறக்கப்பட்டுள்ளது. அதில், இந்த போனின் விலை ரூ.21,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, விவோ நிறுவனம், இந்த போன் விற்பனைக்கு வரும்போது ரூ.2,500 கேஸ்பேக் சலுகை கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
ஆகவே, இந்த போனை வெறும் ரூ.19,499க்கு வாங்கிக்கொள்ள முடியும். வரும் 23ஆம் தேதி இந்த போனின் விற்பனை குறித்த விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்மியான பட்ஜெட்டில் ஓஐஎஸ் கேமரா, 2 டிபி மெமரி சப்போர்ட், அமோலெட் டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் அரோ எல்இடி லைட் டிசைன் பேனல் கொண்ட போன் வேண்டும் என்றால், இந்த போன் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








