Home
Mobile

ஆஃபர்ல தூக்கலாம்.. வெறும் ரூ.19,999க்கு 16GB ரேம்.. 44W சார்ஜிங்.. OIS கேமரா.. AURO எல்இடி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.19,999 விலையில் 16 ஜிபி ரேம், 64 எம்பி ஆன்டி ஷேக் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 44W சார்ஜிங், 4800mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் விவோ ஒய் 200 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ ஒய்200 5ஜி அம்சங்கள் (Vivo Y200 5G Specification): இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Octa Core Snapdragon 4 Gen 1) சிப்செட் மற்றும் மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

வெறும் ரூ.19999க்கு 16GB ரேம்.. 44W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலானது, 6.67 இன்ச் (2400 x 1080) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும்,

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 180Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 394 பிக்சல் டென்சிட்டி மற்றும் டிசிஐ-பி3 (DCI-P3) வைடு கலர் காமட் (Wide Color Gamut) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ போனில் 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு ரியர் பிளாஷ் மற்றும் டூயல் கலர் டெம்பரேச்சர் கொண்ட அரோ எல்இடி இடம் பெற்றுள்ளது. இதுவொரு ஆன்டி-ஷேக் ஓஐஎஸ் (Anti-Shake OIS) கேமரா மாடலாகும்.

வெறும் ரூ.19999க்கு 16GB ரேம்.. 44W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

இந்த கேமராவில் டூயல் வியூ (Dual View), லைவ் போட்டோ (Live Photo), சூப்பர் மூன் (Super Moon), டபுள் எக்ஸ்போஸர் (Double Exposure), டாக்குமென்ட்ஸ் மற்றும் விலாக் மூவி (Vlog Movie) போன்ற பிரத்யேக மோட்கள் மற்றும் ஸ்டைலிஸ் நைட் ஃபில்டர்கள் (Stylish Night Filters) கொடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் 10x ஜூமிங் உள்ளிட்ட சப்போர்ட் கொண்டுள்ளது. அதே போல 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

இந்த விவோ போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Sensor) வருகிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டுள்ளது. IP5X டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.

இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், ப்ளூடூத் 5.1, வை-பை 5, ஜிபிஎஸ் மற்றும் என்ஃஎப்சி ஆகியவை வருகின்றன. இந்த விவோ போன் ப்ளோரிட் ஏசி கிளாஸ் (Fluorite AG Glass) பேக் பேனல் டிசைன் கொண்டுள்ளது. அதோடு ஜங்கிள் கிரீன் (Jungle Green) மற்றும் டெசர்ட் கோல்டு (Desert Gold) ஆகிய 2 கலர்களில் வருகிறது.

வெறும் ரூ.19999க்கு 16GB ரேம்.. 44W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

இந்தியாவில் இன்று (அக்டோபர் 23) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். விவோ.காம் (Vivo.com) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y200 5G With 16GB RAM, 64MP Camera, 5000mAh Battery Launched in India Specification Price Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X