Home
Mobile

அவசரப்பட்டு எந்த போனையும் வாங்காதீங்க.. 64MP கேமரா.. அக்.23-ல் வரும் சூப்பர் விவோ போன்.. எந்த மாடல்?

மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். அதாவது வரும் அக்டோபர் 23-ம் தேதி இந்தியாவில் விவோ ஒய்200 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் டெசர்ட் கோல்ட் மற்றும் ஜங்கிள் கிரீன் நிறங்களில் இந்த விவோ ஒய்200 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக அமேசான் அல்லது பிளிப்கார்ட் தளத்தில் விவோ ஒய்200 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த விவோ ஒய்200 5ஜி போன்ன் அம்சங்களைப் பார்ப்போம்.

 64MP கேமரா.. அக்.23-ல் வரும் சூப்பர் விவோ போன்.. எந்த மாடல்?

அதாவது விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Qualcomm Snapdragon 4 Gen 1) சிப்செட் வசதி இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனில் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. மேலும் FunTouchOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

 64MP கேமரா.. அக்.23-ல் வரும் சூப்பர் விவோ போன்.. எந்த மாடல்?

அதேபோல 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்200 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் ஆனது 190 கிராம் எடை கொண்டுள்ளது. குறைந்த எடையுடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 5ஜி போன். மேலும் 5ஜி, ஜிபிஎஸ், என்எப்எசி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த விவோ ஸ்மார்ட்போன். அதேபோல் சிறந்த ஆடியோ அம்சத்தைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 5ஜி போன்.

குறிப்பாக இந்தியாவில் விவோ ஒய்200 5ஜி ஆனது ரூ.24,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் போன்களுக்கு போட்டியாகத் தான் இந்த விவோ ஒய்200 5ஜி போன் வெளிவர இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y200 5G will be launched in India on October 23: check price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X