Home
Mobile

தெறிக்குது ஆர்டர்.. 16GB ரேம்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 4800mAh பேட்டரி.. எந்த போன்?

கம்மி பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, அரா லைட், 44W சார்ஜிங், 4800mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட போன் வேண்டுமென்றால், அமேசான் தளத்தில் அட்டகாச தள்ளுபடியில் கிடைக்கும் விவோ ஒய்200 5ஜி போன் நல்ல தேர்வாக இருக்கும்.

விவோ ஒய்200 5ஜி அம்சங்கள் (Vivo Y200 5G Specification): இந்த விவோ போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஆகவே, 64 எம்பி ஆன்டி-ஷேக் மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்டுள்ளது. இந்த டெப்த் கேமராவுக்கு கீழே அரா எல்இடி கொடுக்கப்பட்டுள்ளது.

6GB ரேம்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 4800mAh பேட்டரி.. எந்த போன்?

அதேபோல பிளாஷ் லைட் வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா போனாகும். இந்த மெயின் கேமராவில் ஸ்மார்ட் அரா லைட் போர்ட்ராய்டு (Smart Aura Light Portrait), வெட்டிங் ஸ்டைல் போர்ட்ராய்டு (Wedding Style Portrait) மற்றும் பொக்கெ ஃபிளர் போர்ட்ராய்டு (Bokeh Flare Portrait) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதோடு 10x ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சூப்பர் நைட் மோட், டூயல் வீடியோ போன்ற மோட்களும் வருகின்றன. மிட்டரலான 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.

அதோடு ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Octa Core Snapdragon 4 Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. பக்காவான மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

இந்த போனின் டிஸ்பிளேவும் மிட்-ரேஞ்ச் குவாலிட்டி கொண்டுள்ளது. ஆகவே, 6.67 இன்ச் (2400 x 1080) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட் உள்ளது.

6GB ரேம்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 4800mAh பேட்டரி.. எந்த போன்?

அதோடு எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) கொண்டிருக்கிறது. இந்த போனில் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டடுள்ளது. அதோடு IP5X டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. 5ஜி மற்றும் டூயல் 4ஜி சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த விவோ ஒய்200 5ஜி போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி வருகிறது. ஆகவே, ஸ்லிம் டிசைனில் 190 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த விவோ மாடலில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ஒரே வேரியண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடலில் வை-பை 5, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் என்ஃஎப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போன் ஜங்கிள் கிரீன் மற்றும் டெசர்ட் கோல்டு ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கம்மியான விலையில் பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்டிருப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. இந்த வரவேற்பை அதிகரிக்கும் விதமாக அமேசான் தளத்தில் அதிரடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

இந்த விவோ ஒய்200 5ஜி போனை எச்டிஎப்சி டெபிட் கார்டை (HDFC Debit Card) பயன்படுத்தி வாங்கினால், ரூ.1,500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.20,499 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வெறும் ரூ.20,499க்கு வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Vivo Y200 5G Sale With 21 Percent Discount in Amazon Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X