Home
Mobile

ஆளுக்கொன்னு வாங்கும் பட்ஜெட்.. 64எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. வருகிறது விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய விவோ 5ஜி போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், தரமான கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு விலை மற்றும் சலுகைகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ ஒய்200 5ஜி போனை ரூ.21,999 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

64எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. வருகிறது விவோ போன்.. எந்த மாடல்?

அதேபோல் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த விவோ ஒய்200 5ஜி போனை இஎம்ஐ முறையில் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2500 வரை கேஷ்பேக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சலுகை வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ ஒய்200 5ஜி போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Qualcomm Snapdragon 4 Gen 1) சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஆனது சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்பாக விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனில் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. மேலும் FunTouchOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் கேமரா கொண்டுள்ளது இந்த போன். பின்பு 16எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது.

64எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. வருகிறது விவோ போன்.. எந்த மாடல்?

44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்200 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் ஆனது 190 கிராம் எடை கொண்டுள்ளது. குறைந்த எடையுடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 5ஜி போன். மேலும் 5ஜி, ஜிபிஎஸ், என்எப்எசி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த விவோ ஸ்மார்ட்போன்.குறிப்பாக இந்த போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y200 5G price and offers leaked online ahead of October 23 launch: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X