மார்க்கெட்டே மிரளுது.. 64MP கேமரா.. 256GB மெமரி.. 44W சார்ஜிங்.. இதுதான் புது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் விரைவில் விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய விவோ இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த போனின் புகைப்படங்கள் அன்லைனில் கசிந்துள்ளது.
அதாவது விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ போன் அறிமுகமாகும். குறிப்பாக டெசர்ட் கோல்ட் (Desert Gold) மற்றும் ஜங்கிள் கிரீன் ( Jungle Green)நிறங்களில் இந்த புதிய விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த போனில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வலது பக்கத்தில் உள்ளன. குறிப்பாக இந்த போன் மெலிதான எடை மற்றும் அட்டகாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் ஆன்லைனில் ஏற்கனவே வெளியான இந்த விவோ ஒய்200 5ஜி போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Qualcomm Snapdragon 4 Gen 1) சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனில் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. மேலும் FunTouchOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்200 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் ஆனது 190 கிராம் எடை கொண்டுள்ளது.
5ஜி, ஜிபிஎஸ், என்எப்எசி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த விவோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.24,000-க்குள் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
photo courtesy: 91mobiles


Click it and Unblock the Notifications








