மிரள விடும் விவோ.. 256GB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. 64MP கேமரா.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் கடந்த அக்டோபர் ஆண்டு மாதம் விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்200 5ஜி ரூ21,999 விலையில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் இந்த போனின் புதிய வேரியண்ட் ஒன்றும் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
அதாவது தற்போது விவோ ஒய்200 5ஜி போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வேரியண்டின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. விவோ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் ஜங்கிள் கிரீன் ( Jungle Green) மற்றும் டெசர்ட் கோல்ட் ( Desert Gold) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

விவோ ஒய்200 5ஜி அம்சங்கள் (Vivo Y200 5G specifications): 6.67 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த விவோ ஒய்200 5ஜி போன் அதேபோல் 2400 x 1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 394 பிக்சல் டென்சிட்டி, டிசிஐ-பி3 (DCI-P3) வைடு கலர் காமட் (Wide Color Gamut) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Octa Core Snapdragon 4 Gen 1)சிப்செட் கொண்டுள்ளது இந்த போன். இந்த சிப்செட் மேம்பட் செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் பயனர்களை கவரும் வகையில் விவோ ஒய்200 5ஜி போனுக்கு மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13)ஆதரவுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
64 எம்பி மெயின் கேமரா+ 2 எம்பி டெப்த் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் ரியர் பிளாஷ் மற்றும் டூயல் கலர் டெம்பரேச்சர் கொண்ட அரோ எல்இடி இடம் பெற்றுள்ளது. இதுவொரு ஆன்டி-ஷேக் ஓஐஎஸ் (Anti-Shake OIS) கேமரா மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
டூயல் வியூ (Dual View), லைவ் போட்டோ (Live Photo), சூப்பர் மூன் (Super Moon), டபுள் எக்ஸ்போஸர் (Double Exposure), டாக்குமென்ட்ஸ் மற்றும் விலாக் மூவி (Vlog Movie) போன்றகேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர இந்த போனின் கேமராவில் ஸ்டைலிஸ் நைட் ஃபில்டர்கள் (Stylish Night Filters) கொடுக்கப்பட்டுள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி உடன் விவோ ஒய்200 5ஜி போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Sensor), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
ப்ளூடூத் 5.1, வை-பை 5, ஜிபிஎஸ், என்ஃஎப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன். அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








