Home
Mobile

டிரிபிள் கேமரா அமைப்புடன் பட்ஜெட் விலையில் விவோ ஒய்20 (2021): இதோ முழு விவரங்கள்!

விவோ ஒய்20 2021 பட்ஜெட் ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோ ஒய் 20 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். விவோ ஒய்20 (2021) ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது.

விவோ ஒய் 20 (2021) ஸ்மார்ட்போன்

விவோ ஒய் 20 (2021) ஸ்மார்ட்போன்

விவோ ஒய் 20 (2021) ஸ்மார்ட்போனானது ஆக்டோகோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதன் டிஸ்ப்ளேவில் சிறிய உச்சநிலை வரம்புடன் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஒரே ரேம் வேரியண்ட்டில் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

விவோ ஒய்20 (2021) விலை

விவோ ஒய்20 (2021) விலை

விவோ ஒய்20 (2021) விலை குறித்து பார்க்கையில் இது மலேசியாவில் எம்ஒய்ஆர் 599 ஆக உள்ளது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.10,900 ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனானது டான் ஒயிட் மற்றும் நெபுலா ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

விவோ ஒய்20 (2021) ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் கிடைக்கும் தன்மை குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபண்டச் ஓஸ் உடன் வருகிறது. 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது.

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்

விவோ ஒய்20 (2021) ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் உள்ளது.

விவோ ஒய்20 (2021) கேமரா அம்சங்கள்

விவோ ஒய்20 (2021) கேமரா அம்சங்கள்

விவோ ஒய்20 (2021) கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ ஒய்20 (2021) ஸ்மார்ட்போனில் வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக உள்ளது. இதில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y20 (2021) Smartphone Launched With Triple Rear Camera: price, Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X