மலிவு விலையில் புதிய விவோ Y1s ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?

|

விவோ நிறுவனம் சத்தமில்லாமல் விவோ Y1s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கிள் வேரியண்ட் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் மலிவு விலையில் அரோரா ப்ளூ மற்றும் ஆலிவ் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விபரம் மற்றும் சிறப்பம்சத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

புதிய விவோ Y1s ஸ்மார்ட்போன்

புதிய விவோ Y1s ஸ்மார்ட்போன்

புதிய விவோ Y1s ஸ்மார்ட்போன் இப்போது நிறுவனத்தின் வலைத்தளத்தில் அதன் விவரக்குறிப்புகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளரான மகேஷ் டெலிகாம், இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெறும் ரூ .7,990 என்ற விலையில் எதிர்பார்க்கலாம் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

ரூ .4,550 மதிப்புள்ள ஜியோ நன்மை

ரூ .4,550 மதிப்புள்ள ஜியோ நன்மை

இந்த புதிய விவோ Y1s ஸ்மார்ட்போனுடன் ரூ .4,550 மதிப்புள்ள ஜியோ நன்மைகளை அனுபவிப்பதற்கான
வாய்ப்புகளும் இப்பொழுது கிடைக்கிறது. இத்துடன், 90 நாள் ஷெமரூ (Shemaroo) OTT சந்தா மற்றும் ஒரு முறை டிஸ்பிளே மாற்று சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. சத்தமில்லாமல் வெளியிடப்பட்ட இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

சைலெண்டாக விலை குறைப்பை அறிவித்த ஒப்போ நிறுவனம்.. ஒப்போ ஏ 33 வாங்க சரியான நேரம் இதானா?சைலெண்டாக விலை குறைப்பை அறிவித்த ஒப்போ நிறுவனம்.. ஒப்போ ஏ 33 வாங்க சரியான நேரம் இதானா?

விவோ Y1s சிறப்பம்சம்

விவோ Y1s சிறப்பம்சம்

  • 6.22' இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி கொண்ட டியூட்ராப் நாட்ச் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய FuntouchOS இயங்குதளம்
  • 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
  • 13 மெகாபிக்சல் கொண்ட கேமரா
  • எல்இடி ப்ளாஷ்
  • பேட்டரி
    • 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
    • 4 ஜி வோல்டிஇ
    • வைஃபை 802.11 பி / ஜி / என்
    • புளூடூத் 5.0
    • ஜிபிஎஸ்
    • மைக்ரோ யுஎஸ்பி
    • 3.5 ஆடியோ ஜாக்
    • 4,030 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Vivo Y1s Has Silently Launched In India Know The Price and Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X