ரூ.8,000 மட்டும்தானா- Vivo Y1s அட்டகாச அம்சங்களோடு விரைவில் அறிமுகம்!

|

விவோ ஒய் 1 எஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாடல் நல்ல தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

விவோ ஒய் 1 எஸ்

விவோ ஒய் 1 எஸ்

விவோ ஒய் 1 எஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் முன்னதாகவே சில நாடுகளின் சந்தைகளில் கிடைக்கிறது. ஸமார்ட்போன் பயன்படுத்தும் ஆரம்பநிலை வாடிக்கையாளர்களை குறிவைத்து விவோ இந்த மாடலை அறிமுகம் செய்துள்ளது.

மீடியாடெல் ஹீலியோ பி35 எஸ்ஓசி

மீடியாடெல் ஹீலியோ பி35 எஸ்ஓசி

விவோ ஒய் 1 எஸ் மீடியாடெல் ஹீலியோ பி35 எஸ்ஓசி உடன் வருகிறது. இதில் வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்ப்ளே வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4030 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது. விவோ ஒய் 1 எஸ் இந்திய விலை தோராயமாக ரூ.8,100 என்ற அடிப்படையில் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

விவோ ஒய் 1 எஸ் எதிர்பார்க்கப்படும் விலை

விவோ ஒய் 1 எஸ் எதிர்பார்க்கப்படும் விலை

விவோ ஒய் 1 எஸ் இந்திய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விவோ ஒய் 1 எஸ் முன்னதாகவே கம்போடியாவில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு விலை இந்திய மதிப்பின்படி ரூ.8,100 ஆக இருக்கலாம். எதிர்பார்க்கப்படும் விலையில் இருந்து அறிமுக விலையில் பெரிய மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.

2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்

விவோ ஒய் 1 எஸ் சிறப்பம்சங்கள்

விவோ ஒய் 1 எஸ் சிறப்பம்சங்கள்

விவோ ஒய் 1 எஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது கம்போடியா வலைதளத்தின் பட்டியலின் மூலம் சில விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் இரட்டை சிம் நானோ சிம்கார்டு வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் ஃபன்டச் ஓஸ் 10.5 மூலம் இயக்கப்படுகிறது.

13 மெகாபிக்சல் கேமரா

13 மெகாபிக்சல் கேமரா

விவோ ஒய் 1 டிஸ்ப்ளே வசதி குறித்து பார்க்கையில், இதில் 6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி உடன் இயங்குகிறது. இதில் 2ஜிபி ரேம் வசதி இருக்கிறது. ஒரே பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அது 13 மெகாபிக்சல் சென்சார் ஆகும். முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

4030 எம்ஏஎச் பேட்டரி வசதி

4030 எம்ஏஎச் பேட்டரி வசதி

விவோ ஒய் 1 எஸ் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு உள்ளது. விவோ ஒய் 1 எஸ் ஸ்மார்ட்போனில் 4030 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. விவோ ஒய் 1 எஸ் ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ, ஆலிவ் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y1s Expected to Launching Soon in India: Here the Expected Price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X