அறிமுகமானது புதிய Vivo போன்.. 50எம்பி கேமரா.. 5500mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்19எஸ் (Vivo Y19s) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த போன் 5500mAh பேட்டரி, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்19எஸ் போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ ஒய்19எஸ் அம்சங்கள் (Vivo Y19s Specifications): 6.68-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,608 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த 12என்எம் ஆக்டோ-கோர் யுனிசாக் டி612 சிப்செட் (12nm octa core Unisoc T612 chipset,) உடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் Funtouch OS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்19எஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 0.08எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஒய்19எஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது விவோ ஒய்19எஸ் ஸ்மார்ட்போன். மேலும் ப்ளூ (Blue), பிளாக் (Black), சில்வர் (Silver) நிறங்களில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ-காம்பஸ், விர்ச்சுவல் கைரோஸ்கோப், ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light), பிராக்சிமிடி (Proximity) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
5500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்19எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
ஆனால் விவோ ஒய்19எஸ் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த போனின் விலை வெளியாகும். மேலும் பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, வியட்நாம் போன்ற சில நாடுகளில் இந்த போன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








