வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.12000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 5500mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
விவோ பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 5500mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் விவோ ஒய்19எஸ் (Vivo Y19s) போன் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜிபி நோட்டிபிகேஷன் எல்இடி கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டமுடன் பிரீமியம் லுக் கொடுக்கிறது. லேட்டஸ்ட் ஆண்டார்ய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கிறது. இந்த விவோ ஒய்19எஸ் போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ ஒய்19எஸ் அம்சங்கள் (Vivo Y19s Specifications): இந்த விவோ போனில் 6.68 இன்ச் (1608 × 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90 Hz ரெஃப்ரெஷ் ரேட், 264 பிபிஐ பிக்டல் டென்சிட்டி மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும் பி3 கலர் காமட் பேக் செய்துள்ளது.

பன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 (Octa Core Unisoc T612) சிப்செட் வருகிறது. இந்த விவோ போனில் 2 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கிறது. 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் இருக்கிறது.
அதேபோல 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலும் கிடைக்கிறது. விர்ச்சுவல் ரேம் மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட் கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் அதிக பேக்கப் கொண்ட பேட்டரி சிஸ்டமுடன் பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது. நீண்ட பேக்கப் கொண்ட பட்ஜெட் மாடலில் இப்போது இதுவும் டாப் லிஸ்ட்டில் இணைத்துவிட்டது. டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஏனென்றால், மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் ஆரா எல்இடி கிடைக்கிறது.

இந்த எல்இடி மூலம் நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். ஆகவே, ஆர்ஜிபி கலர்களில் இன்டிகேஷன் கொடுக்கும். 50 எம்பி மெயின் கேமரா + 0.8 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் விவோ போன்களில் வழக்கமாக கிடைக்கும் நைட் மோட் மற்றும் போர்ட்ராய்டு மோட் போன்ற பீச்சர்கள் வருகின்றன.
இந்த விவோ ஒய்19எஸ் போனில் 5 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. சைடு-பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-facing Fingerprint Sensor), IP64 டஸ்ட் ரெசிஸ்டன்ட், டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கின்றன. பெரிய பேட்டரி இருப்பதால், 8.10 எம்எம் தடிமன் கொண்டிருக்கிறது. டைனாமிக் கலர் பேக் பேனல் இருக்கிறது.
இந்த விவோ போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,965ஆக இருக்கிறது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,230ஆக இருக்கிறது. முன்னதாக குளோபல் மார்கெட்டில் வெளியாகியது. இப்போது தாய்லாந்து நாட்டில் வெளியாகி இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இந்தியாவிலும் மேற்கண்ட பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே, இது அதிக பேக்கப் மற்றும் பிரீமியம் லுக் போனை பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பக்கா ஆப்ஷனாக இருக்கும். இந்த போனில் ஃபேர்ல் சில்வர் (Pearl Silver), க்ளோசி பிளாக் (Glossy Black) மற்றும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) கலர்கள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








