Home
Mobile

சைலெண்டாக அறிமுகமான புதிய Vivo போன்.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் புதிய விவோ ஒய்19எஸ் ப்ரோ (Vivo Y19s Pro) ஸ்மார்ட்போனை தற்போது மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய விவோ ஒய்19எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்19எஸ் ப்ரோ அம்சங்கள் (Vivo Y19s Pro Specifications): 6.68-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ ஒய்19எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சைலெண்டாக அறிமுகமான புதிய Vivo போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

அதேபோல் யுனிசார் டி612 சிப்செட் (Unisoc T612 chipset) வசதி கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஒய்19எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 16 (FuntouchOS 16) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் +256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் புதிய விவோ ஒய்19எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த விவோ போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி டூயர் ரியர் கேமரா அமைப்புடன் விவோ ஒய்19எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன். இதுதவிர IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்பட்டது.

6000mAh பேட்டரி உடன் இந்த விவோ ஒய்19எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, எஃப்எம் ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளது.

விவோ ஒய்19எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை MYR 499(இந்திய மதிப்பில் ரூ.10,067)-ஆக உள்ளது. பேர்ல் சில்வர் (Pearl Silver), க்ளேசியர் ப்ளூ (Glacier Blue), டைமண்ட் பிளாக் (Diamond Black) நிறங்களில் இந்த புதிய விவோ ஒய்19எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

photo credit: vivo, gizmochina

Best Mobiles in India

English summary
Vivo Y19s Pro launched with 6000mAh battery, 8GB RAM: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X