Home
Mobile

பின்றானே இவன்.. ரூ.10,571 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. 50MP கேமரா.. 15W சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?

ஸ்மார்ட்போன் மார்கெட் அதிரும்படியான பட்ஜெட் விலையில் 5500mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 2 டிபி மெமரி சப்போர்ட் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம் கொண்ட விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி (Vivo Y19s GT 5G) போன் வெளியாகி இருக்கிறது. டைன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் கொண்ட இந்த புதிய விவோ போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி அம்சங்கள் (Vivo Y19s GT 5G Specifications): இந்த விவோ போனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 570 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

பின்றானே இவன்.. ரூ.10,571 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. 50MP கேமரா!

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்ட மீடியாடெக் டைமைன்சிட்டி 6300 5ஜி 6என்எம் (MediaTek Dimensity 6300 5G 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த விவோ போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்கள் உள்ளன. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலும் இருக்கிறது.

மேலும், 2 டிபி ஸ்டோரேஜ் கொடுக்க மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் அந்தந்த மாடல்களுக்கு ஏற்ப கிடைக்கிறது. இந்த விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 0.08 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயர் ரியர் சிஸ்டம் உள்ளது.

பின்றானே இவன்.. ரூ.10,571 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. 50MP கேமரா!

நைட் மோட், போர்ட்ராய்டு மோட், லைவ் போட்டோ, ஸ்லோவ் மோஷன் போன்ற மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகராகன கேமரா பீச்சர்களையும் கொடுக்கிறது. 8.19 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொடுக்கிறது. சைடு-ஃபிங்கர்பிரிண்ட் வருகிறது. ஜேட் கிரீன் (Jade Green) மற்றும் கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.10,571ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.11,628ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.12,686ஆகவும் இருக்கிறது. இப்போது, இந்தோனேசியா மார்கெட்டில் வெளியாகி, விற்பனைக்கு வந்து இருக்கிறது.

ஆகவே, விலையும் இந்தோனேஷியன் ருபியா அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த போனை எதிர்பார்க்கலாம். இங்கும் இதேபோல பட்ஜெட்டில் விலையில் வெளியாக வாய்ப்புள்ளதால், இங்கிருக்கும் விவோ பிரியர்கள் மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்கள் காத்திருக்கின்றன. ஓரிரு வாரங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y19s GT 5G With 50MP Camera 5500mAh Battery 8GB RAM Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X