Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி (Vivo Y19s GT 5G) ஸமார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய விவோ போன் Geekbench தளத்தில் V2526 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. அதுவும் முதலில் இந்த போன் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும்.

அதேபோல் மேம்பட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுங்க..வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி அம்சங்கள் (Vivo Y19s GT 5G Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 6300 (Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த புதிய விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த விவோ போன்.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது,

குறிப்பாக 6000mAh பேட்டரி உடன் விவோ ஒய்19எஸ் ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y19s GT 5G Spotted on Geekbench: May Launch Soon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X