Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ரூ.12,499 பட்ஜெட்ல Vivo 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் விவோ ஒய்19எஸ் 5ஜி (Vivo Y19s 5G) ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்19எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.625 தள்ளுபடியும் உள்ளது எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ரூ.12,499 பட்ஜெட்ல Vivo 5ஜி போன்..

விவோ ஒய்19எஸ் 5ஜி அம்சங்கள்: 6.74-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது விவோ ஒய்19எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 70 சதவீதம் NTSC கலர் கேமட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆக்டா கோர் 6 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் புதிய விவோ ஒய்19எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 (FunTouchOS 15) கொண்டு இயங்குகிறது விவோ ஒய்19எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ ஒய்19எஸ் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா (எப்/2.2) + 0.8 மெகாபிக்சல் செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்19எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எலஇடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ரூ.12,499 பட்ஜெட்ல Vivo 5ஜி போன்..

தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் உடன் விவோ ஒய்19எஸ் 5ஜி ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த விவோ போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 197 கிராம் ஆகும்.

6000mAh பேட்டரி உடன் விவோ ஒய்19எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y19s 5G with 4GB RAM is available at 17 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X